Friday, January 2, 2009

இறுதி நாளன்று !!

நீர் குளத்தில்
கரு விழிகள்,
நடுங்கும்
கை விரல்கள்,
தளர்ச்சியுடன்
கால்கள் ,
புனகைக்க மறுக்கும்
இதழ்கள்,
மகிழ்ச்சி குடிகொண்டிருந்த
என் இடிதாங்கி
இதயமும் இடிந்தது
கல்லூரி இறுதி நாளன்று ..!!

அன்று,

மாணவன் என்ற
முத்திரை நீங்கும் நாள்,

18 ஆண்டு சுகவாசத்தை
வனவாசம் என்று
பொய் பிரச்சாரம்
செய்ய இறுதி நாள்,

" அடுத்தது என்ன ?" என்ற
கேள்வி எட்டு திசைளிருந்தும்
வரத்தொடகும் நாள்,

ஆம் இன்று
என் மாணவ பயணத்தின்
இறுதி நாள் ...

Gopi

No comments: